நைஜீரியா: நைஜீரியாவில் இராணுவம் மீது தீவிவாதிகள் நாடாத்திய தாக்குதலில் 3 தொண்டு நிறுவன ஊழியர்கள் உட்பட 11 பேர் பலி…

போகோ ஹரம் போராளிகள் அரசாங்க இராணுவ முகாம் மீது நடாத்திய தாக்குதலில் 3 உதவித் தொழிலாளர்கள் உட்பட 11 பேரைக் கொன்றனர்.வடகிழக்கு நைஜீரிய நகரான ரானில் இச் சம்பவம் நடை பெற்றது
நான்காவது உதவித் தொழிலாளி கொல்லப்பட்டிருக்கலாம், அத்தோடு பெண் தாதி ஒருவர் கடத்தப்பட்டதாகவும் அஞ்சப்படுவதாக , ஐக்கிய நாடுகளின் செய்தித் தொடர்பாளர் . கூறினார்.
அண்மைக் காலமாக போகோ ஹரம் போராளிகள் அரசாங்க இராணுவத் தளங்கள் மீதான தாக்குதல்கள்
அதிகரித்து வருவதும் கடந்த வாரம் இப் போராளிகளால் 110 க்கும் அதிகமான கல்லூரி சிறுமிகள் கடத்தி செல்லப் பட்ட்தும் குறிப்பிடத்தக்கது