பாகிஸ்தான் : சீன மொழியை பாகிஸ்தானில் அதிகார பூர்வமான மொழியாக அறிவிப்பு ….?

பாகிஸ்தான் சீனா இடையே நிலவும் நட்பை மேன்படுத்தும் வகையில் சீன மொழியான மாண்டரின் மொழி பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாக்கியத்தைத் தொடர்ந்து , இந்த செய்தி தவறானது எனவும் சீன மொழியை பாடசாலைகளில் ஒரு பாடமாக கற்பிப்பதற்கு பரிந்துரை செய்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளதே ஒழிய சீன மொழியை அரசாங்கத்தின் அதிகார பூர்வ மொழியாக மாற்றுவதற்கு அறிவிப்புகள் ஏதும் வெளியிடப்படவில்லை என்று
பாகிஸ்தான் அரசாங்க செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது

ஆனால் அதே சமயம் பாகிஸ்தான் தலைவர்கள் தங்கள் வலைத்தளங்களில் இது பற்றி பதிவிட்டிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது

இந்த செய்தி பாகிஸ்தானில் மட்டும் பரவியது அல்லாமல் இந்தியா, சீனா ஊடங்களும் பரவியதால் பாகிஸ்தான் செனட் சபை தானாக முன்வந்து இது போலியான தகவல் என விளக்கம் அளித்துள்ளது.