கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பின்ஏற்பாட்டில் முள்ளிவாய்கால் இன படுகொலை நினைவேந்தல் மட்டக்களப்பு  கல்லடியில் ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி —


(கனகராசா சரவணன்)
முள்ளிவாய்க்கால் இடம்பெற்ற இன அழிப்பின் நினைவேந்தல் கிழக்கில் இன்று புதன்கிழமை (18)  மட்டக்களப்பு கல்லடி ஸ்ரீ முருகள் ஆலையத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திவேண்டி விசேட பிராத்தனையும்  ஈகைச்சுடர் ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தினர் 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நினைவேந்தலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கான செல்வராசா, ஞா.சிறிநேசன், எஸ். யோகேஸ்வரன், மட்டு மாநகர சபை முதல்வர் ரி.சரவணபவான், பிரதி முதல்வர் சத்தியசீலன், கிழக்கு மாகாண சபை முன்னாள் பிரதி தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா 
தமிழரசு கடசியின் இளைஞர் அணித்தலைவர் சேயோன், மற்றும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் கட்சி ஆதரவாளர்கள் கலந்து கொண்டு உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்தி வேண்டி ஈகைச்சுடர் ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து கஞ்சி வழங்கல் இடம்பெற்றது  .

அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் சிலஇடங்களில் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டிலும் இடம்பெற்றது.