சிரிய படுகொலைக்கெதிராக மட்டக்களப்பில்  கண்டன அடையாள எதிர்ப்பு.

(துறையூர் தாஸன்.)

செயற்ப்பாட்டாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களால் முன்னெடுக்கப்பட்ட சிரிய படுகொலைக்கு எதிரான கண்டன அடையாள எதிர்ப்பு,மட்டக்களப்பு காந்திப் பூங்கா முன்பாக அமைதியான முறையில் நேற்று(01) மாலை 5:00 மணி வேளையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

2009 இல் முள்ளிவாய்க்கால் 2018 இல் சிரியாவா,மக்களை கொல்வதை நிறுத்து,வல்லரசாதிக்கப் போட்டியில் சிறுவர்களை கொல்லாதே,நாட்டின் எதிர்காலத்தை அழிக்காதே; சிறுவர்களை கொல்லாதே,அமைதி ஒரு போர் குற்றமாகும்,சிரியாவில் குண்டுகள் போடாதே,மனிதத்தை மதிப்போம்,யுத்தத்தின் வலி எமக்கு தெரியும் யுத்தத்தை நிறுத்து,மனித உயிர் பெறுமதி மிக்கது;யுத்தம் வேண்டாம் ஆகிய சுலோகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை தாங்கிக்கொண்டு பறையறிந்து தங்களது கண்டன அடையாள எதிர்பை வெளிப்படுத்தியிருந்தனர்.

இக் கண்டன அடையாள எதிர்ப்பு நேற்று காலை 10 மணி வேளையில் கிளிநொச்சி கந்தசாமி கோயிலிலும் யாழ் பஸ் நிலையம் முன்பாகவும் மாலை 4:00 மணி வேளையில் திருகோணமலை மக்கெய்சர் மைதானத்திலும் இடம்பெற்றதென்பதும் குறிப்பிடத்தக்கது

By admin