கல்முனை மாநகரசபைக்கான த.வி.கூட்டணியின்  மேலதிக இரண்டு ஆசனங்களுக்கான பெயர்கள் வெளியானது!

நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கல்முனை மாநகரசபைக்கு தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு கிடைத்த இரண்டு மேலதிக் ஆசனங்களுக்கான பெயர் விபரங்களை கட்சி அறிவித்துள்ளது.

பாண்டிருப்பு ஆறாம் வட்டாரத்தில் போட்டியிட்ட காத்தமுத்து கணேஸ்  பெரியநீலாவணையில் போட்டியிட்ட விஜயரெட்ணம் கமலதாசன் ஆகிய இருவரும் கல்முனை மாநகரசபைக்கான தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர்களாக கட்சி அறிவித்துள்ளது.

இத் தேர்தலில் போட்டியிட்டு சேனைக்குடியிருப்பில் வெற்றி பெற்ற செல்வா உட்பட கல்முனை மாநகரசபைக்கு த.வி.கூட்டணி உறுப்பினர்கள் மூவர் பதவியேற்கவுள்ளார்கள். அவ்வாறே திருக்கோவில் பிரதேச சபைக்கு கிடைத்துள்ள மேலதிக ஆசனத்திற்கு வேல்முருகு புவனேந்திரராஜா அவர்களையும் கட்சி நியமித்துள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் ஆலையடிவேம்பில் ஆறு உறுப்பினர்களையும், கல்முனையில் மூன்று உறுப்பினர்களையும், திருக்கோவிலில் இரண்டு உறுப்பினர்களையும்  தமிழ் விடுதலை கூட்டணி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

By admin