2022, மே 09 அன்று இலங்கையின் அலரிமாளிகை மற்றும் காலி முகத்திடல் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் பொலிஸ் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தகவல்களை கோரியுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகளுக்கு உதவுவதற்காக, இந்த தகவல்களை வழங்குமாறு பொதுமக்கள் கேட்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, பொதுமக்கள் தமது தகவல்களை வழங்குவதற்காக தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

அமைதியின்மை காரணமாக காயங்கள், சேதங்கள் மற்றும் சொத்துக்களை இழந்தவர்கள், இந்த தொடர்பு எண்கள் மூலம் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.