பாதிக்கப்பட்ட பெரியநீலாவணை மக்களுக்கான அவசர உதவிப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன!

பெரியநீலாவணையில் நேற்று முன்தினம் இரவு வீசிய சுழல் காற்று காரணமாக வீடுகள் சேதைமடைந்து நிர்ககதியான மக்களுக்கான அவசர உதவிப்பணிகள் நேற்று முன்னெடுக்கப்பட்டன.

நேற்றைய தினம் காலை கல்முனை   பிரதேச செயலாளர் லவநாதன், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோடிஸ்வரன், கல்முனை மாநகரசபைக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்களான  கென்றி மகேந்திரன்,  குபேரன், சந்தரசேகரம் ராஜன், சிவலிங்கம் ஆகியோர் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்திருந்தனர்.

அதனைத்தொடர்ந்து  பாதிக்கப்பட்ட மக்கள் தற்காலிகமாக  தங்குவதற்கு பிரதேசசெயலாளர்  பெரியநீலாவணை சரஸ்வதி வித்தியாலயத்தை ஒழுங்குசெய்ததுடன் உடனடித் தேவைகளான குடிநீர் மற்றும் மருத்துவவசதிகளும் செய்து கொடுக்கப்பட்டதுடன் சமைத்த உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான காலை உணவு கல்முனை மாநகரசபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள சந்தரசேகரம் ராஜன் வழங்கியிருந்தார். மக்களுக்கு உணவுகளை கல்முனை தமிழ் இளைஞர்கள் ஒன்றியம் களத்தில் நின்று வழங்கி வைத்தனர்.  மதிய உணவு பெரியநீலாவரண 1 B மாதர் அபிவிருத்திசங்கத்தின் அனுசரணையுடன் கல்முனை தமிழ் இளைஞர்கள் ஒன்றியம் மற்றும் விநாயகர் நலன்புரி முற்சக்கர வண்டி சங்கத்தினர் இணைந்து உணவுகளை சமைத்து மக்களுக்கு வழங்கியிருந்தனர். மாநகரசபைக்கு தெரிவு செய்யப்பட்ட சிவலிங்கம் அவர்கள் சமையலுக்காக நான்கு அரசி மூடைகளையும் வழங்கியிருந்தார்.

மக்களுக்கான அவசர உதவிப்பணியில் நேற்றையதினம் முழுவதுமாக பெரியநீலாவணை இளைஞர்கள், மற்றும்  கல்முனை பிரதேச இளைஞர்கள் பலரும்    ஈடுபட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள 200 க்கும் மேற்பட்ட வீடுகள் பெருமளவில் சேதமைந்துள்ளது அவர்களுக்கான பாதிப்புக்களை ஈடு செய்வதற்கான நிவாரணங்களை பெற்றுக்கொடுப்பது தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில்  இன்று நடைபெற உள்ளதாகவும் பிரதேச செயலாளர் லவநாதன் தெரிவித்தார்.

 

 

 

 

By admin