சீனா :சீனாவில் முதியோர்களின் எண்ணிக்கை 24 கோடியாக அதிகரிப்பு……

ஒரு சமூகம் தனது ஜனத்தொகையில் ௧௦ விழுக்காடையூ 60வயதுக்கு மேற்பட்டவர்களைக் கொண்டிருந்தால் அது ” முதியோர் சமூகம் ” என்று குறிப்பிடுவது வழக்கம் . இந்த வகையில் சீனாவில் சுமார் 24 கோடியே 10 லட்சம் பேர், 60 வயதைக் கடந்தவர்களாக இருக்கின்றனர். அதாவது, சீன மக்கள் தொகையில் முதியவர்கள் 17.3 சதவீதம் என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன .
இந்த நிலை தொடருமானால் சீனாவில் 48 கோடிக்கும் அதிகமான முதியோ இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப் படுவதாக சீனாவின் முதி யோருக்கான தேசிய ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்தெரிவிக்கப் பட்டுள்ளது .

முன்னதாக, சீனாவில் 1979-ம் ஆண்டு ‘ஒரு குழந்தை கொள்கை’ அமல்படுத்தப்பட்டது. இதன்மூலம் குழந்தை பிறப்பு விகிதம் கட்டுப்படுத்தப்பட்டபோதிலும், மறுபுறம் முதியோரின் எண்ணிக்கை உயர்ந்து வந்தது. எனவே, இந்தக் கொள்கையை 2016-ம் ஆண்டு சீன அரசு ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.