கல்முனை தமிழ் கோட்ட மாணவர்களுக்காக இடம்பெற்ற இலவச கல்விக் கருத்தரங்கு!

பாண்டிருப்பு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் ஏற்பாட்டில்
கனடா கல்வி மேம்பாட்டிற்கான அமைப்பின் நிதிப் பங்களிப்பில்
கல்முனை தமிழ் கோட்டத்துக்கு உட்பட்ட பாடசாலைகளை உள்ளடக்கிய க.பொ. த . சாதாரண தர மாணவர்களுக்கான இலவச கணிதபாட கல்வி கருத்தரங்கு பாண்டிருப்பு கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

இக் கருத்தரங்கில் 350க்கும் மேற்பட்ட மாணவர்ள் பங்குபற்றியிருந்தனர்.

விரிவுரையாளராக ஆசிரியர் A.யதீஷ் கடமையாற்றினார்.