கல்முனை வடக்கு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட அரச காணியை தனியார் ஒருவர் சொந்தம் கொண்டாடி அபகரிக்கும் முயற்சி இன்றும் இடம்பெற்றுள்ளது.

தொடர்ச்சியாக இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வருவது இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும்.

கல்முனை வடக்கு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட கல்முனை 01 C பிரிவில் உள்ள குறித்த அரச காணியான இங்கு மழை காலத்தில் வெள்ளம் வடிந்தோடி நிற்பது குறிப்பிடத்தக்கதாகும்.
குறித்த காணியில் தனியார் ஒருவர் கட்டிடம் கட்ட முற்பட்ட வேலையில் அங்கு முறுகல் நிலை ஏற்பட்டது.

சம்பவ இடத்தில் தமிழ் இளைஞர் சேனை உறுப்பினர்கள் விரைந்து சென்று காணி அபகரிப்புக்கு எதிர்ப்பை தெரிவித்ததுடன் பொலிஸாரும் வருகை தந்து கட்டிடம் கட்டும் முயற்சியை நிறுத்தினர்.

கல்முனை வடக்கு பிரதேச செயலக நிருவாக எல்லையில் உள்ள காணிகளை அபகரிக்கும் சூழ்ச்சியாகவா காணி அதிகாரம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இருந்து பறிக்கப்படுகிறது.

கல்முனை வடக்கு பிரதேசத்திலுள்ள அரசகாணியை இன்றும் அபகரிக்க முயற்சி – கல்முனை வடக்கு பிரதேச செயலக காணி அதிகாரத்தை பறிக்கும் சூழ்ச்சி இதற்காகவா?