ஐரோப்பா : ஐரோப்பா நாடுகளில் பெய்து வரும் கடும் பனிப் புகாரினால் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தற்போது ஐரோப்பிய நாடுகளில் பெய்து வரும் கடும் பனி புகாரினால் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது . முக்கியமாக இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் இதன் தாக்கம் அதிகமாயுள்ளது இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் மைனஸ் 12 டிகிரிக்கும் கீழ் குளிர் நிலை பதிவாகியுள்ளது. லண்டனில் பனிப்பொழிவு உச்சக்கட்டத்தை அடைந்ததால் சாலைகளில் பல அடி உயரத்திற்கு பனித்தூகள்கள் கொட்டிக்கிடக்கின்றன. இதனால் வாகனம் மற்றும் ரயில் போக்குவரத்து கடும் பாதிப்பை சந்தித்துள்ளது.

ஸ்காட்லாந்தில் உச்சக்கட்டமாக 40 செ.மீ. அளவுக்கு பனி ஏரிகளாக மாறியுள்ளன.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ விமான நிலையத்தில் கொட்டித் தீர்த்த பனிப்புயலால் விமான ஓடுதலம் முழுவதும் வெறும் பனிமாயமாக காட்சியளிக்கிறது. ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையத்திலேயே காத்து கிடக்கின்றனர்