பக்தர்கள் புடைசூழ ஸ்ரீ தரவை சித்தி விநாயகர் யானை மேலமர்ந்து கல்முனை மாநகரில் வலம் வந்தார்!

கல்முனை ஸ்ரீ தரவை சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் முத்துச்சப்ற நகர் வலம் நேற்று(28) மிகவும் சிற்பாக நடைபெற்றது. பெருந்திரளான பக்தர்கள் புடைசூழ யானைகளும் பவனிவர விநாயகப் பெருமான்  நகர்வலம் வந்தார்.

அறநெறிப்பாடசாலை மாணவர்களின் கலாசார நடனங்களும் மங்கள வாத்தியமும் முழங்க பெருந்தரளான பக்தர்கள்களுடன் முத்துச்சப்றம் யானைகளின் பவனியுடன் கல்முனை மாநகரில் வலம் வந்தமையால் நேற்று கல்முனை நகரமே மிகவும் கோலாகலமாக காட்சியளித்தது.

நகர் வலத்தில் இளைஞர்கள், யுவதிகள், சிறியவர்கள், பெரியவர்கள் என அனைவருமே கலாசார உடையுடன் பெருந்திரளாக பங்குபற்றியிருந்தனர். கடந்த 18 ஆம் திகதி கொடியேற்றத்துடன் உற்சவம் ஆரம்பமாகிய வருடாந்த மஹோற்சவம் இன்று முதலாம் திகதி தீர்த்தோற்சவத்துடன் இனிதே நிறைவு பெறும்.

By admin