அறநெறிப்பாடசாலைகள் இயங்கும் நேரங்களில் தனியார் வகுப்புக்களை நடைபெறாடலிருக்க நடவடிக்கை எடுத்மைக்கு நன்றி தெரிவிக்கிறார்! -முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன்

(துறைநீலாவணை நிருபர் செ.பேரின்பராசா)

பிரதி ஞாயிற்றுக்கிழமைகளிலும் அறநெறிப்பாடசாலைகள் இயங்கும் நேரங்களில் தனியார் வகுப்புக்களை கிழக்கு மாகாணத்தில் நடாத்துவதை அனுமதிக்கக் கூடாது என்று கண்டிப்பான உத்தரவை பிறப்பித்திருக்கின்ற கிழக்கு மாகாண ஆளுனர் ரோகித போகொல்லாகம மற்றும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.எப்.எம்.டபிள்யூ.ஜீ.திசாநாயக்க, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி..ஏ.நிசாம் ஆகியோருக்கு நன்றியினையும், பாராட்டினையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் குறிப்பிட்டார்.

அவர் தனது நன்றி தெரிவிக்கும் அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, ஒழுக்கமுள்ள சமுதாயமொன்றை தோற்றுவிப்பதற்கு அறநெறிப் பாடசாலைகள் பேருதவி புரிகின்றன என்பதை உணர்ந்து அதற்காக ஒத்துழைப்பு வழங்கி சுற்று நிருபம் ஒன்றை கிழக்கு மாகாணத்திலுள்ள சகல வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் அனுப்பி வைத்து கண்காணிப்பு நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு பணித்துள்ள இம்மூவருக்கும் எமது மக்களின் சார்பில் இதய பூர்வமான நன்றியினைத் தெரிவிக்கின்றேன்.

இதே வேளை இந்து சமய நிறுவனங்கள், இந்து ஆலய பரிபாலனை சபைகள் மற்றும் சமூகப் பற்றாளர்கள் இவ்விடயம் தொடர்பில் கூடிய கரிசனை காட்ட வேண்டியது அவசியமாகும். அத்துடன் ஒரு சில காரணங்களால் இயங்காமல் உள்ள அல்லது சோர்வு நிலை அடைந்துள்ள அறநெறிப்பாடசாலைகளை மீளவும் இயக்கமுற வைப்பதற்கு யாவரும் உழகை;க வேண்டும். இத்தருணத்தில் என்னால் இயன்ற உதவிகளை அறநெறிப்பாடசாலைகளின் இயக்கத்திற்கு செய்வதற்கு சித்தமாகவுள்ளேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

By admin