கல்முனைகுடி பிரதேசத்தில் வெடிப்புச் சம்பவம் நடந்தது என்ன !

-டினேஸ்-

கல்முனை பொலிஸ்  தலைமைக் காரியாலய பிரிவிற்குட்பட்ட கல்முனைக்குடி 12 பிரதேசத்தில்  வெடிப்புச் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது என கல்முனை பொலிஸ்  நிலைய பெருங் குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

அச்சம்பவமானது நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் இல 335 பீ அலீயார் வீதி கல்முனைக்குடி 12 விலாசத்தில் வசிக்கும்  கல்முனை சம்மேளனம் எனும் அரசசார்பற்ற நிறுவனத்தின் பணிப்பாளர் கே.எம்.எஸ்.ஈ. ரியாட் என்பவரது வீட்டிலேயே இவ்வெடிப்புச் சம்பவம் பதிவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன் போது வீட்டில் இருந்தவர்களுக்கு எதுவித சேதங்களும் அற்ற நிலையில் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதுடன் குறித்த வெடிப்புச் சம்பவத்தில் வீட்டின் ஜன்னல் மற்றும் சுவர்களில் சேதங்களுக்குள்ளாகியுள்ளது.

வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட குழாய் ஒன்றை பயன்படுத்தியே இந்த வெடிப்புச் சம்பவம் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

எனவும் மேலதிக விசாரணைகள் அம்பாறை மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு மற்றும் கல்முனை பொலிஸ்  தலைமைக் காரியாலயம் இணைந்து முன்னெடுத்துவருவதாக அவர் தெரிவித்தார்.

By admin