சுழல் காற்று வீசியதில் பெரியநீலாவணையில் சுமார் 100 குடும்பங்கள் பாதிப்பு; பல வீடுகளும் பகுதியளவில் சேதம்!

பெரியநீலாவணையின் கடலை அண்டிய பகுதிகளில் நேற்று இரவு (28) 8.30 மணியளவில் வீசிய சுழல் காற்றின் காரணமாக 1B கிராமசேவகர் பிரிவிலுள்ள சுனாமி கட்டடத் தொகுதிகள், மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலுள்ள வீடுகளும் பகுதியளவில்சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தினால் நிர்மாணிக்கப்பட்ட தொடர்மாடிக்குடியிருப்பு வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளதுடன் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உறவினர், நண்பர்களது வீடுகளில் தஞ்சமடைந்திருக்கின்றனர்.

அனர்த்தம் இடம்பெற்ற சில நிமிடங்களிலேயே குறிப்பிட்ட பிரிவின் கிராம சேவகர், பொலிஸார், விசேட அதிரடிப் படையினர், இராணுவத்தினர், மாநகர சபைக்கு தெரிவான உறுப்பினர் எஸ்.குபேரன் மற்றும் பெருமளவான இளைஞர்களென பாதிக்கப்பட்ட இடத்திற்கு சென்று உடனடி உதவிகளுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் சீரற்ற காலநிலை தொடர்கிறது குறிப்பாக கிழக்கில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடச்சியாக மழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்

-அரவி வேதநாயகம்-
-பட உதவி விஜி நேசராசா

By admin