சற்று  பெரியநீலாவணையில் சுழல் காற்று வீடுகள் பாதிப்பு.

கலைஞர்.ஏ.ஓ.அனல்

சற்று முன் (8.30 pm) வீசிய பலத்த சுழல் காற்றினால் பெரியநீலாவணையில் வீட்டுத்திட்ட குடியிருப்புகள் மற்றும் அதனை அண்டிய பகுதியில் இருக்கும் வீடுகள்  சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.

வீட்டிலுள்ள கூரைகள் கழற்றி வீசப்பட்டும். பாதுகாப்பு வேலிகள் உடைக்கப்பட்டும் இன்னும் பல மனித உடமைகள் சேதப்படுத்தப்பட்டும். மின்சாரம் துண்டிக்கப்பட்டுமுள்ளன.

சிறிது நேரம் மக்களின் கூக்குரலும் அழுகுரலுமே கேட்ட வண்ணமிருந்தது. தற்போது தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதனால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்குரிய பாதுகாப்பான இடங்களையும். உறவினர் வீடுகளையும் நோக்கி நகர்ந்தவண்ணமுள்ளனர்.

தற்போது இலங்கையின் கிழக்கு பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்துகொண்டிருக்கின்ற வேளை பலத்த சுழல் காற்றும் வீசுகிறது.

By admin