சிரியா : சிரியாவில் பெண்கள் நிவாரணப் பொருட்களை பெற  தொண்டு நிறுவனஉள்ளூர்   ஊழியர்களால் பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாகும் அவலம் ..

உள்நாட்டு போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட சிரியாவில் பொதுமக்களுக்கு ஐ.நா. சபை சார்பிலும், சர்வதேச தொண்டு நிறுவனங்கள் தரப்பிலும் நிவாரணப்பொருட்கள் வழங்கப்படுகின்றன.

ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான போர் மற்றும் உள்நாட்டு போர் காரணமாக இடம்பெயர்ந்து உள்ள மில்லியன் கணக்கான மக்கள் சர்வதேச உதவியை நாடிதான் உள்ளனர்.இந்த நிவாரணப் பொருட்களை விநியோகிக்க உள்ளூர் ஆண்கள் நியமிக்கப் பட்டுள்ளனர் . இந்த நிவாரண உதவியை வழங்கும் உள்ளூர் ஆண்கள் சிரிய பெண்களை தங்களுடைய பாலியல் தேவைக்காக பயன்படுத்துகிறார்கள் என்பது தெரியவந்து உள்ளது என பிபிசி செய்தி வெளியிட்டு உள்ளது. உதவியை வழங்கும் ஆண்கள் பெண்களை பாலியல் ரீதியாக தங்களுக்கு இணங்க வலியுறுத்துகிறார்கள் என உதவி பணியாளர்கள் தெரிவித்து உள்ளனர். மூன்று வருடங்களுக்கு முன்னதாக இதுபோன்ற தகவல்கள் வெளியாகி பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. அப்போது எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

சிரியாவில் நிவாரண உதவியை வழங்க பெண்கள் பாலியல் ரீதியாக பயன்படுத்தப்படுகிறார்கள் என்பது தெரியவந்து உள்ளது.

இருப்பினும் அதுபோன்ற சம்பவம் நாட்டின் தெற்கு பகுதியில் நடைபெற்றுதான் வருகிறது என்பது இப்போது தெரியவந்து உள்ளது.

ஐ.நா. உதவி நிறுவனங்கள் மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் இதுபோன்ற செயல்களை சகித்துக் கொள்வது கிடையாது என தெரிவித்து உள்ளன. இப்பிராந்தியத்தில் உதவி அமைப்புகள் தரப்பில் எந்தஒரு தவறும் செய்யப்பட்டது தொடர்பாக எங்களுக்கு எதுவும் தெரியாது என தெரிவிக்கப்படுகிறது.

நிவாரணப் பொருட்களை வினியோகிக்கிற உள்ளூர் மக்கள், பெண்களை பாலியல் ரீதியில் தவறாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இது தொடர்பாக தொண்டு நிறுவன ஊழியர்கள் கூறும்போது, ‘‘பாலியல் உறவுக்காக உள்ளூர் கவுன்சிலில் உள்ளவர்கள் பெண்களுக்கு கூடுதல் உணவுதானிய பைகளை வழங்குகின்றனர். அவற்றை வீடுகளுக்கே அனுப்புகின்றனர். அப்படி பாலியல் உறவுக்கு மறுக்கிற பெண்களுக்கு உணவு தானிய பைகளும் மறுக்கப்படுகின்றன’’ என குறிப்பிட்டனர்.

சிரியாவில் மிகவும் ஆபத்தான பகுதிகளில் வெளிநாட்டு உதவியாளர்கள் செல்ல முடியாத நிலை உள்ளது, அங்கு உதவிப்பொருட்கள் சென்றடைய மூன்றாம் தரப்பு அல்லது உள்ளூர் அதிகாரிகளின் தேவையானது அவசியமாக உள்ளது, எனவே சில மனிதநேய அமைப்புகள் இதுபோன்ற செயல்களில் குருட்டு கண்களுடன் செயல்படுகிறது என நிவாரணப் பணியில் ஈடுபட்டு உள்ள பெண் உதவியாளர் ஒருவர் கூறிஉள்ளார். ஆண் பாதுகாவலர்கள் இல்லாத பெண்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர் என தெரியவந்து உள்ளது. பெண்களை ஒரு குறுகிய கால கட்டத்திற்கு திருமணம் செய்துக் கொண்டு அவர்களை பாலியல் அடிமையாக நடத்தும் நிலையும் காணப்படுகிறது என செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது.