தேர்தலில் பின்னடைவுபற்றிய ஆய்வில் அம்பாறை தவிர்க்கப்பட்டது ஏன்?
அம்பாறை மாவட்ட இ.த.கட்சி ஆதரவாளர்கள் கேள்வி!
காரைதீவு ருபர் சகா
 

நடந்துமுடிந்த தேர்தலில் த.தே.கூட்டமைப்பின் பின்னடைவு பற்றி ஆராய இலங்கை தமிழரசுக்கட்சி மாவட்ட ரீதியாக பிரதிநிதிகளை தனது செயற்குழுக்கூட்டத்தில் நியமித்துள்ளது.

வடக்கு கிழக்கில் யாழ்ப்பாணம் வவுனியா கிளிநொச்சி மன்னார் முல்லைத்தீவு மட்டக்களப்பு ஆகிய  மாவட்டங்களுக்கு பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் அம்பாறை மாவட்டத்திற்கு பிரதிநிதி நியமக்கப்படவில்லை. மாவட்டத்தில் பின்னடைவு இல்லiயா? என் மாவட்டத்தின் த.தே.கூட்டமைப்பு ஆதரவாளர்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

மாவட்டத்தில் சம்மாந்துறை மற்றும் ஆலையடிவேம்புக்கான வேட்புமனு நிராகரிக்கப்பட்டமை தொடக்கம் சகல பிரதேசசபைகளிலும் கட்சி கணிசமான பின்னடைவைக்கண்டிருந்தது.

எனவே அதற்கான காரணங்களைக்கண்டறிந்து அடுத்துவரும் மாகாணசபைத்தேர்தலை வெற்றிகரமாக முன்னெடுக்க இங்கும் ஒரு பிரதிநிதியை கட்சியின் தலைமைப்பீடம் நியமிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆதரவாளர்கள் கோரியுள்ளனர்.

அவர்கள் கட்சியின் பின்னடைவுக்கான காரணத்தைக் கண்டறிந்து அறிக்கையை மத்திய செயற்குழுவிடம் சமர்ப்பிப்பர்.

By admin