அம்பாறை நகரில் பள்ளிவாசல், முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல்; வாகனங்களும் எரிப்பு!

(டினேஸ்)

இன்று (27) நள்ளிரவு அம்பாறை நகரத்தில் அமைந்துள்ள வியாபார நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் இனந்தெரியா நபர்களினால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக அம்பாறை தலைமை பொலீஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் வினவிய போது நள்ளிரவு வேளையில் இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது இதில் தற்போது சம்பவம் நடைபெற்ற பிரதேசத்தில் பதட்ட நிலை நிலவியதனால் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் விரைவு படுத்தப்படுவதாக அம்பாறை தலைமை பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டாம் இணைப்பு

இனவிருத்தியை கட்டுப்படுத்தும் மாத்திரை கலக்கப்பட்டாதலேயே வன்முறை ஏற்பட்டது?

அம்பாறையில் நேற்றிரவு இடம்பெற்ற கலவரத்துக்கு கருத்தடை மாத்திரையை கலந்தமையே  காரணம்  என தெரிவிக்கப்படுகிறது

தான் உணவில் கருத்தடை மாத்திரையை கலந்ததாக கடை உரிமையாளர் ஒத்துக்கொண்ட வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அச்சுறுத்தலுக்கு பயந்தே தான் உணவில் கருத்தடை மாத்திரையை கலந்தேன் என்று ஒத்துக்கொண்டுள்ளாரா என்ற சந்தேகமும் முன்வைக்கப்படுகிறது.

அம்பாறை நகரில் உள்ள பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம்களுக்கு சொந்தமான வர்த்தக நிலையங்கள் என்பன மீது இனந்தெரியாத நபர்களினால் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்ந்து அங்கு நிலவிய பதற்றமான நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

By admin