ரஸ்யாவின் போர்க்கப்பலான மோஸ்க்வாவின் மீது உக்ரைன் ஏவுகணைகள் மோதியதைக் காட்டும் புகைப்படம் முதல் தடவையாக வெளியிடப்பட்டுள்ளது.

எனினும் இன்னும் இந்த ஆதாரம் தெளிவாக இல்லை என்று பிபிசி தெரிவித்துள்ளது.

இந்த புகைப்படம் உண்மையானதாக இருக்கலாம் என ராணுவ கண்காணிப்பாளர்கள் கூறுகின்றனர்.

லண்டன் கிங்ஸ் கல்லூரியில் போர்க் கல்வித் துறையில் முனைவர் பட்டம் பெற்ற மாணவரான ரொப் லீ, இது ஒரு முறையான புகைப்படம் போல் தெரிகிறது என்று ட்வீட் செய்துள்ளார்.

இந்தநிலையில் புகைப்படத்தின் நம்பகத்தன்மையை சரிபார்க்க முடியவில்லை, எனினும் இந்த கப்பல் இந்த முறையில் அழிக்கப்பட்டதாக தாம் நினைக்கவில்லை என்று OSINTtechnical என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக இந்த கப்பலை ஏவுகணைத் தாக்குதலால் மூழ்கடித்ததாக உக்ரைன் கூறியிருந்தது எனினும் கப்பலில் தீப்பிடித்தபின் அது மூழ்கியதாக ரஸ்யா தெரிவித்திருந்தது.