நாட்டின் பிரதமர் பதவியில் மாற்றம் செய்யப்படாது என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்றைய தினம் அநேகமாக புதிய அழைமச்சரவை நியமனம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜனாதிபதி தலைமையிலான புதிய அமைச்சரவையின் பிரதமராக மஹிந்த ராஜபக்ச தொடர்ந்தும் நீடிப்பார் எனவும் புது முகங்கள் பலர் அமைச்சரவையில் இடம்பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 15 மற்றும் 16ம் திகதிகளில் ஜனாதிபதி தலைலமையில் ஜனாதிபதி முன்னாள் அமைச்சரவை அமைச்சரவை அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார்.

அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கையை 15 முதல் 20 வரையில் பேணுவதற்கும் எஞ்சிய வெற்றிடத்தை ஏனைய கட்சிகளுக்கு வழங்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

பந்துல குணவர்தன, மஹிந்தானந்த அலுத்கமகே, பவித்ரா வன்னியாரச்சி, பிரசன்ன ரணதுங்க, ரோஹித்த அபேகுணவர்தன உள்ளிட்டவர்கள் புதிய அமைச்சரவையில் பதவிகளை பெற்றுக்கொள்வதில்லை என தீர்மானித்துள்ளனர்.

ஏற்கனவே நான்கு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் நிதி அமைச்சர் தவிர்ந்த ஏனைய அமைச்சுப் பதவிகளிலும் மாற்றம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.