ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் இலங்கையில் நடத்தப்பட்ட தீர்மானிக்கப்பட்டு இருக்கின்ற நிலையில் இந்த கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி வரை இடம்பெற திட்டமிடப்பட்டுள்ளது.

20க்கு 20 போட்டி தொடராகவே இந்த போட்டிகள் இடம்பெற இருக்கின்றன இந்நிலையில் இந்த போட்டிகளை இலங்கையில் நடத்துவது தொடர்பில் இறுதி தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் அல்லது மீளாய்வு செய்ய வேண்டும் என்ற ஒரு கருத்து இப்பொழுது ஆசிய கிரிக்கெட் சபையில் முன்வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தற்போது நிலவுகின்ற பொருளாதார,அரசியல் நிலை மற்றும் போக்குவரத்து சிக்கல்கள், எரிபொருள் பற்றாக்குறை போன்றவற்றைக் கருத்தில் கொண்டே இது சம்பந்தமாக ஆய்வு செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.