ஸ்ரீதேவியின் உடல் மும்பைக்கு கொண்டு வருவதில் தொடரும் சிக்கல்கள் …….போனி கபூரிடம் விசாரணை ??

துபாயில் குளியல் தொட்டியில் மயங்கி விழுந்து மரணம் அடைந்த நடிகை ஸ்ரீதேவி மரணத்தில் குழப்பங்களும் சந்தேகங்களும் அதிகரித்த நிலையில் துபாய் காவல் துறை அவரின் கணவரான போனி கபூரிடம் விசாரணையை முடுக்கி விட்டுள்ளது .
ஆரம்பத்தில் மாரடைப்பு ஏற்டபட்டு மரணம் சம்பவித்ததாக கூறப்படட நிலையில் பின்பு குளியல் தொட்டியில் மூழ்கி மரணம் சம்பவித்ததாகவும் அவர் உடலில் மது கலந்திருப்பதாகவும் செய்திகள் வெளி வந்தன . இந்த நிலையில் நேற்றிரவு துபாய் நேரப்படி 10.40 மணிக்கு துபாய் போலீசார் போனிகபூரை வரவழைத்து விசாரணை செய்தனர். அவரிடம் சில முக்கிய கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், அவர் கூறிய பதிலை அறிக்கையாக பதிவு செய்த பின்னர் அவர் தங்கியிருந்த ஓட்டலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டதாகவும் சமீபத்திய தகவல்கள் வெளிவந்துள்ளது.
பிரேத பரிசோதனை மற்றும் தடவியல் அறிக்கை முடிவடைந்த நிலையிலும் ஸ்ரீதேவி உடல் மும்பை வருவதில் சிக்கலை எதிநோக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .
இது பற்றி தகவல் தெரிவித்த துபாய்க்கான இந்திய தூதார் நவ்தீப் சிங் , துபாய் காவல் துறையிடம் இது பற்றி பேச்சு வார்த்தை நடை பெறுவதாகவும் கூடிய விரைவில் ஸ்ரீதேவி உடல் மும்பை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப் படுகின்றன என்றும் தெரிவித்தார்