கமல் அரசியல் : ” கட்சி சின்னமே இரவலா ?” மும்பை தமிழர் பாசறை அமைப்பு கட்சி சின்னத்தை கமல்ஹாசனுக்காக தாரை வார்த்தது………

நடிகர் கமல்ஹாசனின் கட்சிக்கொடியில் மும்பை தமிழர் பாசறை அமைப்பு சின்னம் போலிருக்கிறது என்ற கருத்து சமூக வலைத்தளங்களில் பரவி சசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் சின்னத்தின் சொந்தக்காரர்களான தமிழர் பாசறை அமைப்பு தற்பொழுது அதனை கமலுக்காக விட்டுக்கொடுத்துள்ளதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது எந்த அடிப்படையில் விட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது என்று அரசியல் மட்டங்களில் அதிர்வலைகளை உண்டாகியுள்ளது .
நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பிரவேசத்தை கடந்த 21-ந் தேதி ராமேஸ்வரத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இல்லத்திலிருந்து துவங்கி, தனது கட்சி பெயரையும் கொடியையும் அறிமுகம் செய்தார்.

மக்கள் நீதி மய்யம் என்ற தனது கட்சி பெயரையும், சிவப்பு, வெள்ளை, கருப்பு ஆகிய நிறங்களுடன் ஒன்றிணைந்த கைகளோடு நடுவில் நட்சத்திரத்துடன் உள்ள தனது கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தினார்.

இந்நிலையில் கமலஹாசன் அறிமுகப்படுத்திய கட்சி சின்னம் மும்பை தமிழர் பாசறை அமைப்புகுரியது என்று கருத்துக்கள் முன்வைக்கப் பட நிலையில் அதனை கமலுக்காக மும்பை தமிழர் பாசறை அமைப்பு  விட்டுக்கொடுத்துள்ளதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுபற்றி பேசிய மும்பை தமிழர் பாசறை நிர்வாகி ராஜேந்திரசாமி, எங்களின் கட்சியின் கொடியில் உள்ள சின்னமும் கமல்ஹாசன் பயன்படுத்திய கொடியின் சின்னமும் ஒரே மாதிரியாக இருந்தது. எங்களின் சின்னத்தை பயன்படுத்த புரிந்துணர்வு அடிப்படையில் அனுமதி வழங்கியுள்ளோம் என்றார்.