நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாட்டு மக்களும் வீதிக்கு இறங்கி வரும் நிலையில் தென்னிலங்கை அரசியல் சூடுபிடித்துள்ளது.இவ்வாறானதொரு சூழ்நிலையில் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இன்றைய தினம் நாடாளுமன்றம் கூடவுள்ளதாக தெரியவருகிறது.

நாடாளுமன்றம் மற்றும் அதன் வளாக பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.இதேவேளை நாட்டில் தற்போது பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளும் ஆர்ப்பாட்டக்காரர்களால் சுற்றிவளைக்கப்படுகின்றன.

இந்த கலந்துரையாடலின் போதே, இன்று காலை பத்து மணிக்கு நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகவுள்ள நிலையில் நாடாளுமன்றின் பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பில் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.