மரண அறிவித்தல் – அமரர்.திரு.அ.ஹேமச்சந்திரா (ஆசிரியர்)- துறைநீலாவணை

சமத்துவ மக்கள் நல ஒன்றியத்தின் நிறைவேற்று பணிப்பாளர் திரு.அ.சதீஷ்குமார் அவர்களின் உடன் பிறந்த சகோதரர் 04.04.2022 அன்று இறைவனடி சேர்ந்தார்.

துறைநீலாவணையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட,அமரர்.திரு.அ.ஹேமச்சந்திரா ( ஆசிரியர்) அவர்களுக்கு எமது இதய அஞ்சலிகளை சமர்ப்பணம் செய்கின்றோம்.

அன்பிற்கு இலக்கணமாய்
அவனியில் வாழ்ந்து
பண்புடைமை காத்து
பக்குவமாய் வழி நடந்தீர்
இரக்கத்தின் இருப்பிடமாய்
ஈகை பல செய்து எல்லோருக்கும்
நல்லவராய் நாணயமாய் நடந்தீர்
ஏனோ இறைவன் இடை நடுவில்
பறித்து விட்டான்..
துன்புற்றோர் துயர் துடைத்து
துணைக்கரமாய் அடைக்கலம்
தந்த உம்மை
ஆண்டவன் ஏனழைத்தான்
பண்புள்ளோரை பல காலம்
வாழவிடக் கூடாதென்றோ?
என் செய்வோம்
இறைவன் சித்தம் இது
இனி காணமுடியாத சோகநிலையோடு
இங்கிருந்தே ஏங்கியழுகிறோம்.
மண்ணறையின் வேதனைகளிலிருந்து உங்கள் ஆத்மாவை இறைவன் நிறைவாய் காத்தருளி சுவர்க்க புவனத்தில் சுகமான வாழ்வை வழங்கிட பிரார்த்தனை செய்வதோடு;
பிரிவுத்துயரில் ஆழ்ந்திருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தகவல். சமதத்துவ மக்கள் நல ஒன்றியம்