கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையின் இல்ல விளையாட்டுப்போட்டி சிறப்பாக நடைபெற்றது!

கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டி நேற்று (26) கல்லூரியின் முதல்வர் வ.பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது. இப்போட்டிகளில் பாடசாலையின் நான்கு இல்லங்கள் பங்குபற்றியிருந்தன.

சம்பியனாக முதலிடத்தை கிரேஸ் தில்லையம்பலம் (சிவப்பு)இல்லமும், இராண்டம் இடத்தை வில்சன் இல்லமும் (பச்சை), மூன்றாம் இடத்தை யோகம் இல்லமும்(மஞ்சள்), நான்காம் இடத்தை நல்லதம்பி இல்லமும்(நீலம்) பெற்று கொண்டன.

இந்நிகழ்வில் தற்காப்பு கலை மற்றும் ,பாடசாலையின் அனைத்து பிரிவுகளுக்குமான மேலைத்தேய பாண்ட் வாத்திய குழு போன்ற நிகழ்வுகள் பார்ப்போர் மனதை பிரம்மிக்க வைக்குமளவுக்கு சிறப்பாக இடம்பெற்றிருந்தன.

இந் நிகழ்வுக்கு அதிதிகளாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திசாநயக்க, கல்முனை வலயக் கல்விப்பணிப்பாளர் அப்துல் ஜலில், பிரதிக் கல்விப் பணிப்பாளர் வீ.மயில்வாகனம், கல்முனை தமிழ் கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரவியராஜா , கல்முனை  வைத்தியர் ரமேஸ் ஆகியோரும், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றார்கள், பாடசாலை நலன் விரும்பிகள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.

By admin