ரஸ்யாவின் எண்ணெய் கிடங்கின் மீது தமது தாக்குதல் உலங்கு வானூர்திகள் தாக்குதல்களை மேற்கொண்டதாக வெளியான தகவலை உக்ரைன் பாதுகாப்பு படை தலைவர் மறுத்துள்ளார்.உக்ரேனிய தொலைக்காட்சியில் பேசிய டானிலோவ், போரில் பின்னடைவை சந்தித்து வரும் ரஸ்யர்களால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று சுட்டிக்காட்டினார்.அத்துடன் இதுபோன்ற சம்பவங்கள் தொடரும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்;.நேற்று வெள்ளிக்கிழமை காலை இரண்டு உக்ரைனிய உலங்கு வானூர்திகள், உக்ரைனின் எல்லையில் உள்ள ரஸ்ய நகரத்தின் எண்ணெய் கிடங்கின் மீது ஏவுகனை தாக்குதல்களை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதனையடுத்து உக்ரைனின் இந்த தாக்குதல் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு உதவாது என்று ரஸ்யா எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்தநிலையில் புடின் இப்போது உக்ரைனுக்கு எதிரான தனது ஆக்கிரமிப்பு மற்றும் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்துவதற்கு முயற்சிக்கிறார்.

இதனடிப்படையில் இந்த தாக்குதல் ரஸ்யர்களால் நடத்தப்பட்டதாகவே கருதுவதாக உக்ரைன் பாதுகாப்பு தலைவர் குறிப்பிட்டுள்ளார்.