அவுஸ்திரேலியா: அவுஸ்திரேலியா தலைநகரமாகிய கன்பராவில் கடும் காற்றுடன் கூடிய அடைமழை..

அவுஸ்திரேலியா தலைநகரமாகிய கன்பராவில் (Canberra ) கடந்த பல நாட்களாக தொடரும் காற்றுடனான கடும் மழையினாழும் பலத்த வெள்ளம் ஏற்பட்டுள்ளது பாதைகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது .இதனால் நகரின் வட புறத்தே குறிப்பாக லின்காம் டிக்சன் ஓ’கோனோர், டர்னர் ( Lyneham, Dickson, O’Connor, Turner )உட்பட பல பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதுடன் போக்குவரத்துகளும் தடைப்பட்டுள்ளன.

இன்று கன்பரா (Canberra ) பகுதிகளில் நடைபெறவிருந்த ரோயல்கன்பரா நிகழ்ச்சி (Royal Canberra ஷோ ) உட்பட பல நிகழ்வுகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக் கழகத்தில் உள்ள நூலகதில் ஞாயிற்றுக்கிழமை சூறாவளியால் ஏற்பட்ட சேதத்தினால் எவ்வளவு பாதிப்பு என்பது தெரியவில்லை . ஆனால் நூலகத்தில் புத்தகங்களுக்கு கடுமையான சேதம் ஏற்பட்டிருபதாகவும் மற்றும் பல நாட்களுக்கு மீள் திருத்த பணி நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன .
குறித்த பல்கலைக்கழகம் 11 வருடங்களில் முதல் தடவையாக திங்களன்று மூடியது, 22,000 மாணவர்கள் மற்றும் 4500 ஊழியர்கள் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். கடந்த ௨௦௦௭ ம் ஆண்டு பெப்ரவரி மாதம் வளாகத்தில் ஏற்படட தீ விபத்தின் பொது இப் பல்கலைக்கழகம்.
மூடப் பட்டிருந்தது குறிப்பிடதக்கது