மின்னல் தாக்கம்; தொலைபேசியில் பேசிய நற்பிட்டிமுனை குடும்பஸ்த்தர் மரணம்!

(டினேஸ்)

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பல அனர்த்தங்கள் நடைபெற்றுள்ளது அதில் அம்பாறை மத்திய முகாம் பிரதேசத்தில் நேற்று 25 திகதி நண்பகல் மின்னல் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மத்தியமுகாம் பொலிஸ் பிரிவிலுள்ள சடயந்தலாவ பிரதேசத்தில் குறித்த சம்பவம் நடைபெற்றுள்ளது மற்றொரு இளைஞர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு மரணமடைந்தவர் நற்பிட்டிமுனையைச் சேர்ந்த இரு பெண் பிள்ளைகளின் தந்தையான 34 வயதுடைய எம்.ஐ.தாஹிர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் மஜீட்புரத்தை சேர்ந்த எஸ்.எல்.இம்ஜாட் (வயது – 28) என்பவரே படுகாயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பொதுமக்கள் இடி, மின்னல் தாக்கத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள்

By admin