காரைதீவு பிரதேசசபைக்கு  பெண் பிரதிநிதியை வழங்குவது யார்?
சட்டத்தில் இடியப்பச்சிக்கல்: 25வீதம் அமுலாகுமா? வேள்வி கேள்வி!
காரைதீவு   நிருபர் சகா
 
 
காரைதீவுப் பிரதேசசபையைஅமைப்பதில் சிக்கல் நிலை எழுந்துள்ளது. அங்கு பெண்பிரதிநிதித்துவம் 25வீதம் இல்லாத நிலை. இதனால் இங்கு சபையை உரிய திகதியில் ஆரம்பிக்கமுடியாமல் போய்விடுமோ என்று காரைதீவு மக்கள் அஞ்சுகின்றார்கள்.
காரைதீவுப் பிரதேசசபைக்கு வர்த்தமானி அறிவித்தலின்படி நிர்ணயிக்கப்பட்ட பெண்பிரதிநிதித்துவங்களி;ன் எண்ணக்கை 2 ஆகும். அவற்றில் ஒரு பிரதிநிதி ஏலவே வட்டாரத்தில் தெரிவுசெய்யப்பட்டுவிட்டது. த.தே.கூட்டமைப்பில் 6ஆம் வட்டாரத்தில் போட்டியிட்ட திருமதி கே.ஜெயராணி தெரிவாகியுள்ளார்.
எனவே  இரண்டாவது பெண்மணி விகிதாசாரரீதியில் வழங்கவேண்டும். ஆனால் அதனை வழங்குவது யார் என்ற சட்டப்பிரச்சினை எழுந்துள்ளது?
இதுதொடர்பாக பெண்கள் அரசியலுரிமை தொடர்பில் பலதசாப்தகாலமாக குரல்கொடுத்துவரும் மனிதஅபிவிருத்தித் தாபனத்தின் பெண்கள் அமைப்பான வேள்வி அமைப்பு காரைதீவின் பெண்பிரதிநிதித்துவம் 25வீதம் உறுதிப்படுத்துவது தொடர்பில் விழிப்போடு இருப்பதாக அதன் தேசியத்தலைவி திருமதி லோகேஸ்வரி சிவப்பிரகாசம் தெரிவித்துள்ளார்.
அதேவேளை இவ்விதம் கிழக்கில்  3 சபைகளிருப்பதாக தேர்தல் ஆணைக்குழவின் தலைவர் மஹிந்ததேசப்பிரிய  தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கையின்பிரகாரம் 2035பெண் உறுப்பினர்கள் தெரிவாகவேண்டும். ஆனாலிதுவரை 10வீதமான அதாவது 535பெண் உறுப்பினர்களே தெரிவாகியுள்ளனரெனத் தெரிவித்துள்ளார். அதாவது மேலும் 1550 பெண் உறுப்பினர்கள் தெரிவாகவேண்டும்.
தேர்தல் சட்டவிதிமுறையின்படி தேர்தலில் 20வீதத்திற்கு கூடுதலான  வாக்குகளோடு சேர்த்து 3 ஆசனங்களுக்கு மேல் பெறும் கட்சியிடம் அல்லது சுயேச்சையிடம் மட்டும்தான் பெண் ஆசனங்களைக்  கோரமுடியும் என்றுள்ளது.
இந்தச்சட்டத்தின்படி காரைதீவுப்பிரதேசசபைத்தேர்தல் பெறுபேற்றின்படி  ஆக த.அ.கட்சி மட்டுமே 3ஆசனங்களுக்கு மேல் பெற்றுள்ளது. 20வீதத்திற்கும் கூடுதலான 3202(29.8)வாக்குகளைப்பெற்றுள்ளது.ஏனைய 7 அணிகளும் 20வீதத்திற்குக் குறைவான வாக்குகளையும் 3ஆசனங்களுக்கும் குறைவான ஆசனங்களையுமே பெற்றுள்ளது. அதன்படி யாரிடமிருந்து இந்த ஒரு பெண் ஆசனத்தைப் பெறுவது? என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இது சட்டச்சிக்கல்.
காரைதீவு பிரதேசசபையில் பெற்ற செல்லுபடியான வாக்குகள் – 10715
10715 / 11 = 974 ( ஒருவருக்கு)
இதனடிப்படையில் கட்சிகளுக்கான உறுப்பினர்களை பங்கிட்டால் (விகிதாசார முறை)
அ.இ.ம.கா -1010/974 = 1.03 =1
த.அ.கட்சி -3202 /974 = 3.28 =3
ஸ்ரீல.சு.கட்சி – 1684 / 974 = 1.72=2
சுயேச்சை-01  – 1985 /974 = 2.03=2
ஸ்ரீல.முகா – 1522 /974 = 1.56=2
சுயேச்சை -2  – 829 / 974 = 0.85=1
இவ்வாறே 11 அங்கத்தவர்களும் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டது.ஆனால் த.அ.கட்சி வட்டாரங்கள் நான்கை வென்றதனால் அவர்களிடம் இருந்து ஒரு உறுப்பினரை கழிக்க முடியாது ஆனால் ஏனைய கட்சிக்கு வழங்கவேண்டியதையும் குறைக்க முடியாது இதனால் ஒரு உறுப்பினர் அதிகரித்துள்ளது.
அது தொங்குஉறுப்பினரென்பதை அறிவோம். அதன்படி காரைதீவு பிரதேசசபைக்கு 12ஆசனங்கள் கிடைத்துள்ளன.
பெண் பிரதிநிதித்துவம்.
இங்கு சட்டப்படி  2 பெண்கள் இருக்கவேண்டும். ஏலவே  த.அ.கட்சி வட்டாரமுறையில் ஒரு பெண் உறுப்பினரைப்பெற்றுள்ளது.
எனவே போனஸ் முறையில் ஒரு பெண் உறுப்பினரைப்பெறவேண்டும்.
சரி  20% க்கு குறைவான வாக்குகளோடு சேர்த்து 3 ஆசனங்களுக்கு குறைவாகவும் பெறும் கட்சிகளின் அல்லது சுயேச்சைகளின் வாக்குகளை மொத்த செல்லுபடியான வாக்குகளிலிருந்து கழிக்கவேண்டும் என்று பார்த்தால்
செல்லுபடியான வாக்குகள் 10715  -.(1985 1964 1522  1010  829  280 203 )   —   7793 வரும் 10 2922
இந்த 2992ஜ  பெண்ஆசனங்களின் எண்ணிக்கையான 2 ஆல் வகுத்தால் 1461 வரும்.
இந்தத்தொகையைவைத்து பெண் ஆசனம் பெறமுயற்சித்தால் 4 கட்சிகள்  இந்தத்தொகையைப் பெற்றிருந்தாலும்; இந்தப் பெண் ஆசனத்தை யாரிடமிருந்து பெறுவது? எப்படி 25வீதமாக்குவது?
இதுவே இன்றுள்ள பிரச்சினையும் சிக்கலும். இப்படி கிழக்கில்  3 சபைகளிருப்பதாக தேர்தல் ஆணைக்குழவின் தலைவர் மஹிந்ததேசப்பிரிய  தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கையின்பிரகாரம் 2035பெண் உறுப்பினர்கள் தெரிவாகவேண்டும். ஆனாலிதுவரை 10வீதமான அதாவது 535பெண் உறுப்பினர்களே தெரிவாகியுள்ளனரெனத் தெரிவித்துள்ளார். அதாவது மேலும் 1550 பெண் உறுப்பினர்கள் தெரிவாகவேண்டும்.
 

By admin