ருமேனிய எல்லையில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது ட்ரக் வண்டிக்குள் இருந்து 16 இலங்கை குடியேறிகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட தீவிர சோதனை நடவடிக்கையின் போது 38 குடியேறிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் இலங்கை குடியேறியவர்களும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ருமேனியர்களால் இயக்கப்படும் செமி டிரெய்லர் டிரக் மற்றும் இரண்டு மினிபஸ்களில் சட்டவிரோதமாக மறைத்திருந்த நிலையிலேயே குறித்த இலங்கை குடியேறிகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ருமேனியாவில் பதிவுசெய்யப்பட்ட மினிபஸ்கள் முறையே 33 மற்றும் 42 வயதுடைய இருவரால் இயக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்ட இடங்களில் குடியேறிகள் மறைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

22 மற்றும் 51 வயதுடைய இலங்கையைச் சேர்ந்த 16 பிரஜைகள் இவ்வாறு மறைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், Arad Border பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.