உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் எதிர்வரும் மார்ச் மாதம் 06ம் திகதி முதல் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அமைச்சர் பைசர் முஸ்தபா எதிர்வரும் ஓரிரு நாட்களில் வௌியிடவுள்ளார்.

பெண்களின் பிரதிநிதித்துவம் தொடர்பான நெருக்கடிகளை கவனத்திற் கொள்ளாது உள்ளூராட்சி சபைகள் செயற்படத் தொடங்க வேண்டும் என்றும், குறித்த ஒரேயொரு விடயத்துக்காக அதனை பிற்போட முடியாது என்றும் அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளார்.

By admin