கல்முனை ஆதார வைத்தியசாலையில் புதிய சத்திர சிகிச்சை கட்டிடத்தொகுதி சுகாதார பிரதியமைச்சரால் திறந்துவைக்கப்பட்டது!

மட்டக்களப்பு, கல்முனை சுகாதார பிரிவுகளுக்கு பிரதி சுகாதார அமைச்சர் , சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட குழுவினர் நேற்று முன்தினம் (24 விஜயம்  செய்துள்ளனர்.
இதில் மட்டக்களப்பில் ஓர் நிகழ்வை நிறைவு செய்த பின் கல்முனை ஆதார வைத்தியசாலை, பிரதி மா. சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம், அஸ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலை என்பவற்றிற்கும் விஜயம் செய்தனர் .

இவ்விஜயத்தின்போது கல்முனை ஆதார வைத்தியசாலையில் புதிய சத்திர சிகிச்சை கட்டிடத்தொகுதி திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கௌரவ பிரதி சுகாதார அமைச்சர் பைசால் காசிம் அவர்களும்,
சிறப்பு அதிதியாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்      Dr. அணில் ஜெசிங்க அவர்களும், கௌரவ அதிதிகளாக                          Dr.லால் பனபிட்டிய (D.D.G, MSD) ,          Dr.சிறிகரன்(D.D.G,Planning) ,     Dr.எஸ்காணி (Director planning), Dr.சுதாத் கே தர்மரெத்ன (Director T.C.S ) Dr.பிரியந்த அடபத்து(Director M.S) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இங்கு நடைபெற்ற ஒன்று கூடலில் ; அண்மையில் நடைபெற்ற கண் சத்திர சிகிச்சைக்கு சிறப்பான சேவைப்பங்காற்றிய கண் சிகிச்சை பிரிவு உத்தியோகஸ்தர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், அதிதிகளுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டு, நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது

இங்கு நடைபெற்ற ஒன்று கூடலில் ; அண்மையில் நடைபெற்ற கண் சத்திர சிகிச்சைக்கு சிறப்பான சேவைப்பங்காற்றிய கண் சிகிச்சை பிரிவு உத்தியோகஸ்தர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், அதிதிகளுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டு, நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்நாயகத்தின் சிறப்புரையில்;

இலங்கையில் ஓர் முன்மாதிரியான வைத்திய சாலையாக இது உள்ளது. இங்கு கடமையாற்றும் வைத்திய நிபுணர்கள் வைத்தியர்கள் அனைவரும் மிக அன்பாகவும், சிரித்த முகத்துடனும் இருக்கின்றனர்.வைத்திய சாலை துப்பரவாகவும், மிக அழகாகவும் உள்ளது. அனைத்து உத்தியோகஸ்தர்களும் சிறப்பாக பணி புரிகின்றனர். இவ்வாறான வைத்தியசாலையில் நிர்வாகத்தை செய்யும் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் இரா முரளீஸ்வரன் மிகத் திறமைசாலி, அவரும் ஓர் அமைதியான சிரித்துப் பேசும் பண்பாணவர். எனது நிர்வாகத்தில் இவ் வைத்தியசாலை எண்ணி பெருமையடைகிறேன்’ என கூறினார்.

இதேபோன்று முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவர்கள் இவ் வைத்தியசாலையின் அமைப்பை கண்டு தாமாகவே வருகைதந்து , இதே ஒத்த வார்த்தைகளால் வர்ணித்து சென்றது மட்டுமல்லாமல், செல்லும் இடமெல்லாம் இவ் வைத்தியசாலையை வர்ணித்ததும் ஓர் நற்செய்தியே.
இவ்வாறு சேவை வாழ்த்துப் பெறும் ‘கல்முனை ஆதார வைத்தியசாலை’ கல்முனை நகரத்திற்கே பெருமை என மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

By admin