அமரத்துவமடைந்நத அகில இலங்கை இந்து மாமன்ற தலைவருக்கு சிவநெறி அறப்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் அறநெறிப் பாடசாலை மாணவர்களால் நினைவஞ்சலி!

அமரத்துவமடைந்த அகில இலங்கை இந்து மாமன்ற தலைவர் அமரர் கந்தையா நீலகண்டன் அவர்களுக்கு இன்று (25) 7ம் கிராமம் சித்தி விநாயகர் அறநெறி பாடசாலை மாணவர்களால் நினைவஞ்சலி செலுத்தி பிரார்த்தனை செய்யப்பட்டது.

சேனைக்குடியிருப்பு சிவநெறி அறப்பணி மன்ற ஏற்பாட்டில்  7ம் கிராமம் சித்தி விநாயகர் அறநெறி பாடசாலையால்  நடைபெற்ற இந்நிகழ்வில், சிவநெறி அறப்பணி மன்ற தலைவர் சைவவித்தகர் யோ.கஜேந்திரா, பாடசாலை அதிபர் சிவஶ்ரீ தேவகுமார குருக்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டு அன்னாரின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

By admin