இலங்கைக்கான இந்திய துணை தூதுவரின் பிரியாவிடை நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது!

இலங்கைக்கான இந்திய  துணை தூதுவர் நடராஜா அவர்களின் சேவைக்காலம் முடிவடைந்தையிட்டு பிரியாவிடை வைபவம் இன்று (25) யாழ்பாணத்தில் நடைபெற்றது. குறித்த நிகழ்வில், இலங்கைக்கான இந்திய துணை தூதுவருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டுள்ளதுடன், வடக்கு மாகாண முதலமைச்சரினால் நினைவு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண முதல்வர், அமைச்சர்கள், ஆளுநர் உள்ளிட்ட பல அரசியல் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

இதில் அம்பாறை மாவட்டத்தில் இருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.

 

 

 

By admin