கல்முனை மாநகர் ஸ்ரீ தரவை சித்தி விநாயகராலய வேட்டைத்திருவிழா இன்று சிறப்பாக நடைபெற்றது. ( photo)

கல்முனை மாநகர் ஸ்ரீ தரவை சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் எட்டாம் நாள் திருவிழாவான இன்றைய (25) வேட்டைத் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

கல்முனை தமிழ் இளைஞர்கள் ஒன்றியத்தின் உபயமான இன்றைய திருவிழாவில் அதிகளவான இளைஞர்கள், பொதுமக்கள், என பக்கதர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டிருந்தனர்.

தரவை சித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து சுவாமியை ஸ்ரீ சர்வாத்த சித்தி விநாயகர் ஆலயத்திற்கு இளைஞர்கள்  ஊர்வலமாக சுமந்து செல்ல கொட்டும் மழையிலும்  பெருமளவான பக்தர்கள் சுவாமியை புடை சூழ சென்று அங்கு வேட்டைதிருவிழா சிறப்பாக  இடம்பெற்று பின்னர் மஹோற்சவ ஆலயத்தை வந்தடைந்தனர்.

வழமையாக வேட்டைத்திருவிழா உற்சவம் இடம்பெறும் ஆலயத்திலேயே நடைபெற்று வந்தன ஆனால் இம்முறை வேட்டைத்திருவிழா மஹோற்சவ ஆலயத்தில்  இருந்து சுவாமி ஊர்வலமாகச் சென்று இன்னுமொரு  ஆலயத்தில்  வேட்டைத்திருவிழா நடைபெற்று மீண்டும் ஊர்வலமாக உற்சவ ஆலயத்தை வந்தடைந்தமை சிறப்பம்சமாகும். இந்த நடைமுறை  வட மாகாணத்தில் பல ஆலயங்களில் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

கல்முனை தமிழ் இளைஞர்கள் ஒன்றியத்தின் உபயமான இன்றைய திருவிழா சிறப்பாக இடம்பெற்றதுடன்இரவு இளைஞர்களால் ஆலயத்தில் மாபெரும் அன்னதானமும்  நடைபெற்றது..

விநாயகப்பெருமான் முத்முத்துச் சப்றத்தில் கல்முனை மாநரில் வலம் வருதல் எதிர்வரும் 28 ஆம் திகதிஇடம்பெறுவதுடன், 12 ஆம் நாள் திருவிழாவான எதிர்வரும் முதலாம் திகதி வியாழக்கிழமை தீர்த்தோற்சவம் இடம்பெற்று கொடியிறக்கத்துடன் உற்சவம் இனிதே நிறைவு பெறும்.

 

By admin