பாகிஸ்தான், ஈரானில் இருந்து சொந்த ஊர் திரும்பிய 76,000 ஆப்கன் அகதிகள்!

72A23DC3-6D61-47BE-BF70-ED036CA12712_w650_r0_s

பாகிஸ்தான், ஈரானில் இருந்து சொந்த ஊர் திரும்பிய 76,000 ஆப்கன் அகதிகள்!

காபூல்: போரின் காரணமாக இடம்பெயர்ந்த ஆப்கன் அகதிகள், சொந்த ஊர் திரும்பினர்.

போரின் காரணமாக ஆப்கானிஸ்தானிலிருந்து புலம்பெயர்ந்து, பாகிஸ்தான் மற்றும் ஈரானில் பொதுமக்கள் தஞ்சமடைந்தனர். அவர்களின் எண்ணிக்கை 76,400ஐ தாண்டியுள்ளது. இவர்கள் மீண்டும் சொந்த நாட்டிற்கு திரும்பியுள்ளதாக சர்வதேச இடப்பெயர்வு அமைப்பான ஐ.ஓ.எம்  (IOM)தெரிவித்துள்ளது.

இதில், ஆப்கானிஸ்தானுக்கு திரும்பிச்செல்ல விரும்பாத ஆயிரக்கணக்கான அகதிகள் நாடுகடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களில் பாகிஸ்தானிலிருந்து 3,032 அகதிகளும், ஈரானிலிருந்து 73,390 அகதிகளும் ஆப்கானிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானிலிருந்து நாடு திரும்பும் ஆப்கான் அகதிகளில் 90 சதவீத பேருக்கும், ஈரானிலிருந்து 4 சதவீத பேருக்கும் ஐ.ஓ.எம். திரும்பிச் செல்வதற்கான கூடுதல் உதவிகளை வழங்கியுள்ளது. பாகிஸ்தானின் தொடர் பிரசாரத்தால் 2016ஆம் ஆண்டு 4 லட்சம் அகதிகள் ஆப்கானிஸ்தானுக்கே திரும்பியிருந்தனர்.