ஆப்கான் : ஆப்கான் இராணுவமுகாம் மீது தலிபான் தீவிரவாதிகள் நடாத்திய தாக்குதலில் 23 இராணுவ வீரர்கள் பலி .மேலும் பலர் காயம்……

ஆப்கான் மேற்கு ஃபராஹ் மாகாணத்தில் உள்ள இராணுவமுகாம் மீது தலிபான்கள் நடாத்திய தாக்குதலில் 23 ராணுவ வீரர்கள் பலி .

பராஹ் மாகாணத்தின் பாலாபுளுக் மாவட்டத்தில் ஆப்கானிஸ்தான் ராணுவ தளம் இயங்கி வந்தது. நேற்று முன்தினம் இரவு அந்த ராணுவ தளத்துக்குள் தலீபான் தீவிரவாதிகள் 100 க்கும் அதிகமானோர் கூட்டமாக நுழைந்தனர். அங்கு அவர்கள் நடத்திய தாக்குதல்களில் ராணுவ வீரர்கள் 23 பேர் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த தாக்குதலை பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் உறுதி செய்தார். பல தலிபான் தீவிரவாதிகளும் துப்பாக்கி சண்டையில் கொல்லப்பட்டனர் மற்றும் காயமடைந்தனர், ஆனால் அவர்களது எண்ணிக்கையை சரியாக குறிப்பிட முடியாது, ஏனெனில் தீவிரவாதிகள் காயமடைந்த வர்களையும் மரணமடைந்தவர்களையும் உடனடியாக அப்புறப் படுத்தியதால் தீவிர வாதிகள் தரப்பில் இழப்பு பற்றிய விபரம் சரியாகத் தெரியவில்லை .மோதல்களுக்குப் பிறகு கூடுதல் ஆப்கான் அரசு  படைகளை மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கபட்டதாக தகவல்கள்  தெரிவிக்கின்றன

தலிபான் போராளிகள் இந்த தாக்குதல் பற்றி எந்த வித கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிட தக்கது .