இருளில் இருந்து ஒளியை நோக்கி எனும் தொனிப்பொருளில் தேசிய பாரிசவாத தின நடைபவணி மட்டக்களப்பில் இன்று நடைபெற்றது!

-டினேஸ்-

தேசிய பாரிசவாத சங்கம் ஏற்பாடு செய்திருந்த 2018 ஆம் ஆண்டிற்கான தேசிய பாரிசவாத தின நடைபவணி இன்று 24 ஆம் திகதி காலை மட்டக்களப்பு கல்லடிப் பாலத்திற்குப் அருகாமையிலிருந்து ஆரம்பமானது.

இந்நடைபவணியானது கல்லடிப் பாலத்திலிருந்து ஆரம்பமாகி மட்டு வெபர் மைதானம் வரையில் நடைபெற்றது இதன் போது ஆரம்ப நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் மற்றும் பாடசாலை மாணவ மாணவிகள் சமூக அமைப்புக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.  

By admin