குருக்கள்மடத்தில்   தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு.

(துறையூர் தாஸன்)

களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடத்தில், தூக்கில் தொங்கிய நிலையில் நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.எஸ்.பீ.பண்டார தெரிவித்தார்.

சம்பம் குறித்து மேலும் தெரியவருவதாவது,குடும்பத் தகராறினால் திருக்கோயில் தம்பிலுவில் பிரதேசத்தை சேர்ந்த குறித்த நபர்,வீட்டின் சமையல் அறையில் சாரியினை பயன்படுத்தி இன்று அதிகாலை வேளை தூக்கில் தொங்கியிருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விசாரணைகளின் போது,கடந்த 2017.10.17 ஆம் திகதி அன்று களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக சமுர்த்தி பிரிவில் கடமை புரியும் குருக்கள்மடத்தை சேர்ந்த யுவதியொருவரை இரண்டாம் தாரமாக கைப்பிடித்தாரென்றும் அவர்களுக்கிடையில் சதா கருத்து முரண்பாடுகள்,பிரச்சினைகள்  நிலவியதாகவும் இதன்போது தெரியவருகிறது.

குறித்த நபருக்கெதிராக,ஏற்கனவே களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் குடும்பத் தகராறு,நிதிப் பிரச்சினை,அடிதடிப்பிரச்சினை சார்ந்த வழக்குகளும் இருப்பதாக நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பெருங்குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்க்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

By admin