கல்முனை ஆதார வைத்தியசாலை , சித்தி விநாயகர் ஆலயத்திற்கு இமயமலைசாரல் சுவாமி விஜயம் செய்தார்!

கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு நேற்று  (23) இந்தியா இமயமலையில் இருந்து வருகை தந்துள்ள சுவாமி நித்தியானந்த சரஸ்வதி மகராஜ் அவர்கள் வருகை தந்து வைத்திய அத்தியட்சகர்வைத்திய அதிகாரிகள், ஏனைய உத்தியோகஸ்தர்கள், பிரதேச மக்கள் அனைவருக்கும் ஆசீர்வாதத்தை வழங்கி சிறப்பு சொற்பொழிவாற்றினார்.

வைத்தியசாலை சித்தி விநாயகர் ஆலயத்தில் விஷேட பூசை ஆலய குருக்கள் நிரோஜன் ஐயா அவர்களினால் நடத்தப்பட்டது .இவ் ஒழுங்குகளுக்கு வைத்திய அத்தியட்சகர் இரா முரளீஸ்வரன் அவர்கள் அனுமதியளித்து செயல்படுத்தியது,வைத்திய அத்தியட்சகர் அவர்களின் பல் துறை திறமைக்கு எடுத்துக்காட்டு என தெரிகிறது.

சுவாமி அவர்கள் ஆசியுரையில்….

‘ ஒவ்வொரு அடியார்களும் ஓர் இஸ்ர தெய்வத்தை தெரிவு செய்யுங்கள். அதையே நம்பிக்கையுடன் வணங்க வேண்டும்.இதனால் எக்காரியத்திலும் வெற்றி பெறலாம்.எந்த பயமும் இன்றி இன்று இது நடக்க வேண்டும் என்று உறுதிபட எண்ணி எழுதியும் வைத்து தியானியுங்கள், நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்.ஆனால் நீங்கள் கோபம். பொறாமை, ஈயாமை போன்ற சில குணங்களை கைவிட வேண்டும். இதுவே உங்கள் எண்ணம் நிறைவேறாததற்கு காரணம் ‘ என்று கூறினார்.

சுவாமி அவர்களின் வருகையால் இவ் வைத்தியசாலையும். ஆலயமும் இன்னும் புனிதம் பெற்று விட்டது என வைத்திய அத்தியட்சகர் சுவாமியிடம் தெரிவித்தார்.

இவ் வைத்தியசாலையும் ஆலயமும் மிக அழகாக இருப்பதாகவும் எனது ஆசீர்வாதம் எப்போதும் இதற்கு இருக்கும் என சுவாமி கூறிச்சென்றார்.

By admin