பாண்டிருப்பு சிவன் ஆலய பாற்குடப்பவனி நேற்று சிறப்பாக இடம்பெற்றது

பாண்டிருப்பு சிவனாலய வருடாந்த அலங்கார உற்வசத்தின் ஆறாம் நாள் திருவிழாவான நேற்று வெள்ளிக்கிழமை (23) பாற்குடப் பவனி சிறப்பாக நடைபெற்றது. பெருந்திரளான பக்கதர்கள் பாற்குடப் பவனியில் பங்குபற்றியிருந்தனர்.

பாண்டிருப்பு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து பாற்குடம் ஏந்தி பக்தர்கள் பாண்டிருப்பு ஸ்ரீ முருகன் ஆலயத்தையும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தையும் தரிசித்து சிவனாலயத்தை வந்தடைந்தனர்.

சிவனாலய வருடாந்த உற்சவம் கடந்த 18 ஆம் திகதி ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்று வருகிறது. எதிர்வரும் முதலாம் திகதி தீர்த்தோற்சவமும்இரண்டாம் திகதி வெள்ளிக்கிழமை திருக்கல்யாண திருவிழாவும், பூங்காவனத்திருவிழாவும் நடைபெற்று, மூன்றாம் திகதி வைரவர் பூசையுடன் உற்சவம் இனிதே நிறைவு பெறும்.

உற்சவ கால கிரியைகள் ஆலய பிரதம குரு சிவசிறி க.ஐ.யோகராசா குருக்கள், மற்றும் சிவசிறி பரமலிங்கக் குருக்கள், சிவாகமத் தொண்டன் சிவசிறி சி.கோபி சர்மா ஆகியோரால் நடைபெறுகிறது.

   

By admin