கல்முனையில்  அத்துமீறி காணி ஆக்ரமிப்பு தொடர்பாக முறைப்பாடு!

கல்முனை தரைவை பிள்ளையார் ஆலயத்திற்கு பின்புறம் உள்ள அரச காணியில் அத்துமீறி  மண்நிரப்பப்படும் விடயம் தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வயல்களுக்கான நீர்ப்பாசனங்களுக்கு பயன்படும் இந்த அரச காணியில்  ஏற்கனவே  அத்துமீறி மண்நிரப்பபட்டிருந்தது. இதற்கெதிராக நீர்ப்பாசண தொழில்நுட்ப உத்தியோகத்தரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு வழக்கும் நிலுவையில் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

அரசகாணியில் சட்டவிரோதமாக அத்துமீறி ஆக்கிரமிக்கும் இவ்விடயங்களை கட்டுப்படுத்தல் தொடர்பாக நீர்ப்பாசண திணைக்க உத்தியோகத்தர் பிரநீத் மதுரங்க அவர்களுடன் தரவைசித்தி விநாயகர் ஆலய நிருவாகம், கல்முனை மாநகரசபைக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்  k.சிவலிங்கம், கல்முனை தமிழ் இளைஞர்கள் ஒன்றியம், வட்டவிதானை ஏ. ஜெயக்குமார், காணிக்குழு தலைவர் வி. தங்கவேல் ஆகியோர் கலந்துரையாடி வயல்நிலங்கள் அரசகாணிகளில் மண்நிரப்பல் ,அத்துமீறிய ஆக்கிரமிப்பு தொடர்வதை தடுத்தல் தொடர்பாக தங்கள் முறைப்பாட்டை இன்று முன்வைத்தனர்.

 

By admin