அவுஸ்திரேலியா: அவுஸ்திரேலியா துணை பிரதமர் பர்னபிஜொய்ஸ் (Barnaby Joyce ) பதவி விலகல்….

அண்மையில் பாலியல் பிரச்சினையில் சிக்கி பெரும் நெருக்கடிக்குள்ளான அவுஸ்திரேலியா துணைப் பிரதமர் பர்னபிஜொய்ஸ் (Barnaby Joyce ) இன்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்தார்

அவுஸ்திரேலியா துணைப் பிரதமர் பர்னபிஜொய்ஸ் (Barnaby Joyce ) ஏற்கனவே நடாலி( Natalie ) என்ற பெண்ணை1993ம் ஆண்டு  திருமணம் செய்து இவருக்கு நான்கு பெண் குழந்தைகள் உள்ள நிலையில்  பர்னபி ஜொய்ஸ்க்கு அவரின் அலுவலகத்தில் ஊடகத் துறையில் பணி புரியும் விக்கி கேம்பியன் (Vikki Campion )என்ற இளம் பெண்ணுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது . இந்த நிலையில் விக்கி கேம்பியன் கருவுற்றார் . இவருக்கு வரும் ஏப்ரல் மாதம் குழந்தை பிறக்க உள்ளது

இந்த நிலையில் அரசின் கடும் விமர்சனத்துக்கு உள்ளான இவரின் விவகாரம் அரசாங்கத் தரப்பில் பெரிய அதிர்வலைகளை இவருக்கு எதிராக ஏற்படுத்தியது  இவரின் இந்த நடவடிக்கைக்கு பிறகு அவுஸ்திரேலியா பிரதமர் அமைச்சர்களின் ஒழுக்க விடயத்தில் சில விதி முறைகளை பிரதமர் மால்கம் டர்ன்புல்  அதிரடியாக மாற்றங்களை கொண்டு வந்துள்ளார் . இது பற்றி அவர் விளக்கம் அளிக்கையில் : ” அமைச்சர்கள் தங்களுடன் பணியாற்றும் அலுவலக ஊழியர்களுடன் எந்த விதமான பாலியல் உறவு வைத்துக் கொள்வதை ஏற்க முடியாது. இந்த விதி முறை உடனடியாக அமுலுக்கு வரும் ” என்று தெரிவித்தார்.

இந்த விவகாரங்களுக்கு மத்தியில் அவுஸ்திரேலியா துணைப் பிரதமர் பர்னபிஜொய்ஸ் (Barnaby Joyce )
இன்று தனது துணைப் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்தார் .இது அவுஸ்திரேலியா அரசு வடடாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது .
இது பற்றி கருத்து தெரிவித்த லேபர் கட்சியின் தலைவர் பில் ஷர்ட்டோன் கூறுகையில் இவரின் இந்த பதவி விலகல் அரசுக்கு ஒரு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்