கோடம்பாக்கம் வலம் : இன்று வெளியாகும் 11 தமிழ் படங்கள் ……..

இன்று ஒரே நாளில் தமிழில் 11 புதிய படங்கள் வெளியாகின்றன. மார்ச் 1-ம் தேதியிலிருந்து தமிழ் திரையுலகம் ஸ்ட்ரைக்கில் ஈடுபடக்கூடும் என்பதால், அதற்கு முன்பாக இருக்கிற சிறிய, நடுத்தரப் படங்கள் அனைத்தையும் வெளியிடும் முயற்சியில் தயாரிப்பாளர்கள் இறங்கியுள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இன்று வெளியாகும் 11 படங்களின் விவரங்கள்: மெர்லின், 6 அத்தியாயம், கேணி, ஏன்டா தலைல எண்ணை வைக்கல, காத்தாடி, பேய் இருக்கா இல்லையா, டொமினிக் வீடு, கூட்டாளி ஆகிய 8 நேரடி தமிழ்ப் படங்களும், அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகன், போக்கிரி பையன், வெட்டாபுலி ஆகிய மூன்று டப்பிங் படங்களும் வெளியாகின்றன. Buy Tickets ஏற்கெனவே வெளியான படங்களில் நாச்சியார், கலகலப்பு 2 போன்றவை இன்னும் ஓடிக் கொண்டிருக்கின்றன. இன்று வெளியாகும் படங்களுக்கு பெரிய அளவில் தியேட்டர்கள் கிடைக்கவில்லை. கிடைத்த அரங்குகளில் போட்டவரை லாபம் என ரிலீஸ் பண்ணுகிறார்கள்.