கமல் அரசியல் கமலின் மநீம கட்சிக்கொடி சுட்டதா ?.. கமலை வறுத்தெடுக்கும் சமூக வலைத்தளங்கள்

கமல்ஹாசன் தொடங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொடியின் சின்னத்தின் வடிவம் கொப்பியடிக்கப் ப்பட்டது என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கியுள்ள கமல்ஹாசன், கொடியில் உள்ள ஆறு கைகள், ஆறு தென்மாநிலங்களைக் குறிக்கும் என விளக்கமளித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் சின்னம் அறிமுகம் செய்த போது அதில் தாமரை, பாம்பு இடம் பெற்றிருந்தது. இதற்கு பலரும் கருத்து கூறினர். எங்கிருந்து கொப்பியடித்தது என்று ஆதாரப்பூர்வமாக பதிவிட்டனர். இதனையடுத்து தாமரை, பாம்பு போன்றவைகளை நீக்கிவிட்டு இப்போது பாபா சின்னம் மட்டுமே உள்ளது. இப்போது கமலின் கட்சி, கொடி மும்பை தமிழர் பாசறையின் கொடியில் இருந்து மநீம கட்சிக்கொடி சுட்டது என்றும் கட்சி பெயரை எந்த படத்தில் இருந்து சுட்டார் என்று தெரியலையே என்றும் கேட்டுள்ளார் ஒருவர்.