இந்தியாவில் பிரித்வி -2 ஏவுகணை சோதனை….

ரித்வி -2”எனப்படும் தரையிலிருந்து தரைக்கு பாயும் குறைந்த தூர ஏவுகணை ஒன்றை இந்தியா 21ஆம் நாளிரவு வெற்றிகரமாகச் செலுத்தியுள்ளது.

21ஆம் நாளிரவு 8:30 அளவில், இந்தியாவில் ஒடிசா மாநிலத்தின் கடலோர பிரதேசத்தில் சாந்திப்பூர் சோதனை தளத்தில் இருந்து இந்த ஏவுகணை வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது. திட்டிப்படி, வங்காள விரிகுடாவிலுள்ள இலக்கு ஒன்றை இந்த ஏவுகணை வெற்றிகரமாகத் தாக்கியது என்று இந்தியத் தேசியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.