ஊழல் குறைந்த நாடுகளின் பட்டியல் ட்ரான்ஸ்பரண்சி இன்டர்நேஷனல் அமைப்பினால் வெளியீடு இலங்கை 91 ஆவது இடத்தில்………

ஊழல் குறைந்த நாடுகளின் பட்டியல் வெளியீடு நியூசிலாந்து முதல் இடத்திலும், டென்மார்க் 2 வது இடத்திலும் உள்ளது. பின்லாந்து மூன்றாவது இடத்திலும், நார்வே நான்காவது இடத்திலும் உள்ளன. சுவிட்சர்லாந்து ஐந்தாவது இடத்திலும், சிங்கப்பூர் 6 வது இடத்திலும், சுவீடன் 7 இடத்திலும், கனடா 8 வது இடத்திலும், லக்சம்பர்க் 9 வது இடத்திலும், நெதர்லாந்து 10 வது இடத்திலும், உள்ளன.

மொத்தம் 180 நாடுகள் கொண்ட இந்த பட்டியலில் சோமாலியா 180 ஆவது இடத்தில உள்ளது . இந்த பட்டியலில் இலங்கை 91 ஆவது இடத்திலும் இந்தியா 81 வது இடத்திலும் உள்ளன . . பிலிப்பைன்ஸ், இந்தியா, மாலத்தீவுகள் உள்ளிட்ட நாடுகளில் ஊழலுக்கு எதிராக செயல்படும் தன்னார்வலர்கள், செய்தியாளர்கள், அரசு அதிகாரிகள், கண்காணிப்பு அமைப்புகளை சேர்ந்தவர்கள் அச்சுறுத்தப்படுவதாகவும், கொல்லப்படுவதாகவும் ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு தெரிவித்துள்ளது. . பிலிப்பைன்ஸ், இந்தியா, மாலத்தீவுகள் உள்ளிட்ட நாடுகளில் ஊழலுக்கு எதிராக செயல்படும் தன்னார்வலர்கள், செய்தியாளர்கள், அரசு அதிகாரிகள், கண்காணிப்பு அமைப்புகளை சேர்ந்தவர்கள் அச்சுறுத்தப்படுவதாகவும், கொல்லப்படுவதாகவும் ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு தெரிவித்துள்ளது.