ரஜனிக்கு கலக்கத்தை ஏற்படுத்திய கமலின் அரசியல் பிரவேசம்……..

கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம் ரஜனி தரப்பில் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .கமலின் மக்கள் நீதி இயக்கத்தின் கட்சி தொடர்பான வேலைகளை தனது ஆட்களை அனுப்பி
உளவு பார்த்து ரஜினிகாந்த் தகவல்களை தெரிந்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற தனது கட்சி பெயரையும், சிவப்பு, வெள்ளை, கருப்பு ஆகிய நிறங்களுடன் ஒன்றிணைந்த கைகளோடு நடுவில் நட்சத்திரத்துடன் உள்ள தனது கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தினார்.

அந்நிலையில், கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம், ரஜினிக்கு சிறு கலக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக தெரிகிறது. மேலும், பல வருடங்களுக்கு பிறகு தான் அரசியலுக்கு வர முடிவெடுத்த போது, தனக்கு எதிரியாக தனது நண்பரே அரசியல் களத்தில் இருப்பது ரஜினிக்கு சற்று வருத்தத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இருந்தாலும், கமல்ஹாசனை தாண்டி அரசியல் களத்தில் தன்னை முன்னிறுத்தும் பணிகளில் ரஜினிகாந்த் ஈடுபட்டுள்ளார். ஆனாலும், அவரை விட வேகமாக செயல்பட்ட கமல்ஹாசன் நேற்று அனைத்து வேலையும் முடித்து விட்டு அரசியல்வாதி ஆகிவிட்டார்.
ந்நிலையில், ராமேஸ்வரம் மற்றும் மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை ரஜினியின் ஆட்கள் களத்திலிருந்து உளவு பார்த்து லைவ் அப்டேட் கொடுத்துள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளது. கமலின் நிகழ்ச்சிகள், அவருக்கு கூடிய கூட்டங்கள், முக்கியமாக பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள், அங்கு கூடிய கூட்டம், ரசிகர்களின் செயல்பாடுகள் என அனைத்தும் அவ்வப்போது ரஜினிக்கு தகவல் சொல்லப்பட்டதாம்.

எனவே, அரசியல் களத்தில் கமல்ஹாசன் முந்திக் கொண்டதால், சட்டபை தேர்தல் வரை காலம் தாழ்த்தாமல், விரைவில் ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்புகளை வெளியிடுவார் என அவரின் ரசிகர் மன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.